திமுக கரை வேட்டி கட்டினது குத்தமாடா? வறுத்தெடுத்த பெண் அதிகாரி
பெரம்பலூரில் நடந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு, திமுக கரை வேட்டியுடன் வந்ததால் ஓட்டல் உரிமையாளரை, உணவு பாதுகாப்புத்துறை பெண் அதிகாரி ஒருவர் வார்த்தைகளால் வறுத்தெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி, பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில், ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்களின் உரிமையாளர்களுடன் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் செளமியாசுந்தரி ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார்.
அப்போது, இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் யா யா என்ற பெயரில் டீ ஸ்டால் வைத்திருக்கும் முன்னாள் நகராட்சிக் கவுன்சிலரான அப்துல்பாரூக் என்பவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அப்போது, பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் செளமியாசுந்தரி, தி.மு.க. கரை வேட்டியில் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்கள். தி.மு.க., அ.தி.மு.க., மதிமுக என நான் எந்த கட்சிக்கும் யாருக்கும் பயப்படமாட்டேன் என்று எகிற, பாரூக் தன் பங்கிற்கு பதிலடி கொடுத்தார்
இதையடுத்து ஆவேசமான அந்த பெண் அதிகாரி, "ஸ்டாலின் என்னுடைய நண்பர், நேரில் போகலாமா, பேசிக்கலாமா" என பாரூக்கிற்கு சவால் விடுத்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த பாரூக், "தி.மு.க., என்றால் உங்களுக்கு என்ன இளக்காரமா ? கேவலமா போச்சா? நான் கட்சி சம்பந்தமாக எதுவும் பேசவில்லையே; கடை ஓனர் என்ற முறையில் கூட்டத்தில் பங்கேற்றேன், வேட்டி கட்டுவது என்னுடைய உரிமை" எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
"கடையில் முகக்கவசம் அணியாத ஒருவரைப் பார்த்தாலும் அவ்வளவுதான், கடைக்குள் அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தால் அனுமதிக்க வேண்டும்" என்று இருந்த இடத்தில் இருந்தே ஓட்டல் உரிமையாளர்களை எல்லாம் மிரள வைத்தார் அந்த பெண் அதிகாரி.
இதனால், கூட்டத்தில் பங்கேற்றிருந்த மற்ற கடைகளின் உரிமையாளர்கள் அவரை சமாதானம் செய்து அமரவைத்தனர். 'பண்டிகை நேரம் என்பதால் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கடைகளுக்கு சீல் வைத்து விட்டால் என்ன செய்வது?' என்ற அச்சம் காரணமாக எதிர்க் குரல் எழுப்பாமல் அமைதி காத்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்புக் கூட்டத்தில், சம்பந்தமில்லாமல் அரசியல் பேசி, வீண் வாக்குவாத்தை அந்த பெண் அதிகாரி வளர்த்ததாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
திமுக கரை வேட்டி கட்டினது குத்தமாடா? வறுத்தெடுத்த பெண் அதிகாரி #Perambalur | #DMK | #FoodSafetyOfficer https://t.co/fhlfBIAaxW
— Polimer News (@polimernews) November 6, 2020
Comments