என்ன விலை கொடுத்தாவது நாட்டின் எல்லையை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 3401
என்ன விலை கொடுத்தாவது நாட்டின் எல்லையை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

என்ன விலை கொடுத்தாவது நாட்டின் எல்லையை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

எல்லைப் பிரச்சனையை அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிப்பதாகவும், ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை மதித்து செயல்பட உறுதி பூண்டுள்ளதாகவும் கூறினார்.

எல்லையில் அத்துமீறலை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது என்றும் ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக தெரிவித்தார். லடாக் விவகாரம் தொடர்பாக இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நாளை 8வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments