ராணுவ முன்கள வீரர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க நடவடிக்கை - பிபின் ராவத்
ராணுவ முன்கள வீரர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் பேசிய அவர், 17 ஆண்டு கால சேவைக்குப் பின் ஓய்வு பெறும் வீரர்கள் மாதம்18 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை கொண்டு குடும்பத்தை நடத்துவது சிரமமானது என்றார்.
ராணுவ வீரர்களுக்கு பள்ளியில் படிக்கும் வயதில் பிள்ளைகள் இருக்கும் காலத்தில், குறைந்த அளவிலான ஓய்வுதியத்தை பெற்று வாழ நிர்பந்திக்கும் விதத்தில் அவர்களை பணியில் இருந்து அனுப்ப முடியாது என்று கூறினார்.
கர்னல், பிரிகேடியர் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கும் ஓய்வு வயதை உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதன் மூலம் 54 வயதில் இருந்து ஓய்வு வயது 58 ஆக அதிகரிக்கப்படும் என்று பிபின்ராவத் தெரிவித்தார்.
Comments