கொடுமணல் அகழாய்வு பொருட்களை ஆய்வுக்கு அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற 12 பொருட்களின் காலத்தை அறிய அமெரிக்காவுக்கு 10 நாட்களில் அனுப்பவும், இதற்கான தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக காமராஜ்,ஆனந்தராஜ் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி, கொடுமணல் அகழாய்வில் ஏதேனும் சுவாரசிய தகவல்கள் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு தொல்லியல் துறை தரப்பில், " கொடுமணல் அகழாய்வில் முதன்முறையாக ஆ போன்ற நெடில் எழுத்துக்களும், அ,ஆ,இ,ஈ " என்ற எழுத்துக்களும் கிடைக்கப்பெற்றுள்ளன" என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள் கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற 12 பொருட்களை வயதை அறியும் கார்பன் சோதனைக்கு உட்படுத்த, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு 10 நாட்களில் அனுப்பவும், இதற்கான தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டனர்.
Comments