அமெரிக்க அதிபர் தேர்தலில் இரு பெரும் கட்சிகளை தவிர ஏனைய கட்சிகளுக்கும் கணிசமான வாக்கு
அமெரிக்க அதிபர் தேர்தலில் இரு பெரும் கட்சிகள் தவிர ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களும் வாக்குகளை பெற்றுள்ளனர்.
அதிபர் பதவிக்கான போட்டியில் 11 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
ஆனால், குடியரசு கட்சி, ஜனநாயக கட்சிக்கு இடையில்தான் நேரடி போட்டி நிலவியது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 50.4 சதவீத வாக்குகள் (7,20,32,334) பெற்றுள்ளார்.
குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 48 சதவீத வாக்குகளுடன் (6,85,76,031) இரண்டாம் இடத்தில் உள்ளார்.
லிபர்டேரியன் கட்சி வேட்பாளர் 1.1 சதவீத வாக்குகள் (16,40,107) பெற்று மூன்றாம் இடத்திலும், கிரீன் கட்சி வேட்பாளர் ஹோவி ஹாக்கின்ஸ் 0.2 சதவீத வாக்குகளுடன் (3,27,913) நான்காம் இடத்திலும் உள்ளனர். மற்ற வேட்பாளர்களுக்கு மொத்தம் 0.3 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.
Comments