அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடரும் இழுபறி.. முடிவு எப்போது..?

0 6343
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை நெருங்கி உள்ள நிலையில், டிரம்ப் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடி இருப்பதால் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை நெருங்கி உள்ள நிலையில், டிரம்ப் தரப்பு உச்சநீதிமன்றத்தை  நாடி இருப்பதால் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து 2 நாட்கள் ஆகும் நிலையில், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட முடியாதபடி குழப்பம் நிலவி வருகிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் மொத்தம் உள்ள 538 தேர்வுக்குழு பிரதிநிதிகளின் வாக்குகளில், 264 இடங்களைப் பெற்று வெற்றியை நெருங்கி இருக்கிறார்.

270 இடங்களைப் பெறுபவரே அதிபராக முடியும் என்ற சூழலில் குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப் 214 இடங்களைப் பெற்று பின்தங்கி இருக்கிறார்.

மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 9 மாநிலங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை முடிவடையாத சூழலில், 5 மாநிலங்களில் இருவருக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது.

நெவடா, அரிசோனா ஆகிய மாநிலங்களில் பைடன் சற்றே முன்னணியில் இருக்கிறார். அதே போன்று பென்சில்வேனியா, ஜார்ஜியா, வடக்கு கரோலினாவில் டிரம்ப் சற்று முன்னணியில் இருக்கிறார்.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஆதாரமின்றி குற்றம்சாட்டியுள்ள டிரம்ப், உச்சநீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்.

பென்சில்வேனியா, மிச்சிகன், ஜார்ஜியா ஆகிய 3 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் தரப்பு கோரியுள்ளது.

பென்சில்வேனியாவில் தாமதமாக வந்த தபால் வாக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை பைடன் வெற்றி பெற்று அதிபராக வந்தாலும், செனட் சபையில் பெரும்பான்மையுடன் இருக்கும் குடியரசு கட்சியினரை எதிர்கொண்டு, முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவது சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments