தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

0 10557
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யுமென சென்னை வானில ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யுமென சென்னை வானில ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன்,குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பரப்பில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார். 

அடுத்த 3 நாட்களில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடுமென அவர் குறிப்பிட்டார். இதே நேரத்தில் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென அவர் கூறினார்.

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் புவியரசன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments