பிஎஸ்எல்வி சி-49 ரக ராக்கெட் நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது

0 1410
பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வரும் 7ந் தேதி விண்ணில் செலுத்தப்படும் என விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வரும் 7ந் தேதி விண்ணில் செலுத்தப்படும் என விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

புவிகண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் இஓஎஸ்1 செயற்கைக்கோள் உள்பட வணிக ரீதிலான 9 பன்னாட்டு செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்படவுள்ளது.

ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வரும் 7ம் தேதி மாலை 3 மணியளவில் ராக்கெட் ஏவப்படும் என்றும், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments