ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 1961

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணம் வைத்து விளையாடும் அனைத்து ஆன் லைன் விளையாட்டுகளையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துவோரை குற்றவாளிகளாகவே கருதப்படும் என அவர் கூறினார். பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோரின் கருத்தை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், கொரோனா காலம் என்பதால் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments