அமெரிக்க தேர்தலில் பதிவான ஒவ்வொரு வாக்கையும் எண்ண வேண்டும்-ஜோ பைடனின் ஆதரவாளர்கள் வலியுறுத்தல்

0 5585
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒவ்வொரு வாக்கையும் எண்ண வேண்டுமென ஜோ பைடன் ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒவ்வொரு வாக்கையும் எண்ண வேண்டுமென ஜோ பைடன் ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். வெற்றியை நெருங்கி உள்ள ஜோ பைடன் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

சில மாநிலங்களில் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கு தடை ஏற்படுத்தும் முயற்சியை ஜோ பைடன் ஆதரவாளர்கள் கண்டித்துள்ளனர்.

ஒவ்வொரு வாக்கையும் கண்டிப்பாக எண்ண வேண்டும் என்று வலியுறுத்தி நியூயார்க்கில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். 5-வது அவென்யூவில் இருந்து வாஷிங்டன் சதுக்கம் வரை அமைதியாக முறையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments