ரபேலின் பலம் கூடுகிறது.. நவீன ஏவுகணைகளை வாங்குகிறது இந்தியா..!
ரபேல் விமானங்களில் இருந்து பயன்படுத்துவதற்காக பிரான்சிடம் இருந்து நவீன ஏவுகணைகளை இந்தியா வாங்குகிறது.
ஹேமர் என்ற அந்த ஏவுகணை அனைத்து காலநிலையிலும், மிகவும் குறுகிய தூரம் முதல் 70 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ஜிபிஎஸ் வசதி இன்றி ஏவப்பட்டு, இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும். இந்த ஏவுகணையை எதிரிகளால் முடக்கவும் இயலாது என்பதும் ஒரு சிறப்பம்சமாகும்.
ஹாம்மர் ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதம் இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே கையெழுத்தானது. இந்த மாத இறுதியில் இந்த ஏவுகணை வந்து சேர உள்ளது.
வழக்கமாக ஒப்பந்தம் போடப்பட்டு ஒரு ஆண்டுக்குப் பிறகே ஏவுகணை வழங்கப்படும் என்றாலும், எல்லைப் பிரச்சனை காரணமாக அவற்றை உடனடியாக இந்தியாவுக்கு வழங்க பிரான்ஸ் முன்வந்துள்ளது.
Comments