உள்நாட்டில் உருவான கோவாக்சின் தடுப்பூசி பிப்ரவரியில் கிடைக்கும்? ஐசிஎம்ஆர் விஞ்ஞானி தகவல்
ஐசிஎம்ஆருடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசி, எதிர்பார்த்ததையும் விட முன்னதாக, வரும் பிப்ரவரி மாதம் தயாராகி விடும் என ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞானி ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கொரோனா நடவடிக்கை குழு உறுப்பினராகவும் இருக்கும் இவர், முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில், இந்த தடுப்பூசி, சிறந்த பலனை வெளிப்படுத்தி உள்ளதாக கூறியிருக்கிறார்.
அதே நேரம் சில பக்கவிளைவுகளுக்கும் வாய்ப்பிருக்கலாம் என்ற அவர், அதை சந்திக்க தயார் என்றால், தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என்றார். திட்டமிட்டபடி வெளியானால்,கோவாக்சின், இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா தடுப்பூசி என்ற பெருமையை பெறும்.
Comments