ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடமையாக்கியதை எதிர்த்து வழக்குத் தொடுக்க தீபக்குக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

0 15488
ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடமையாக்கியதை எதிர்த்து வழக்குத் தொடுக்க தீபக்குக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடமையாக்கியதை எதிர்த்து வழக்குத் தொடுக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்குக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடமையாக்கி அவசரச் சட்டம் பிறப்பித்தது செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தீபக் வழக்கு தொடுத்தார்.

அந்த மனுவில் தனிநபர் சொத்துக்களைக் கையகப்படுத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்துச் சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடுக்க தீபக்குக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments