வயநாடு: தமிழக மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை! - நீலகிரி எல்லையில் பலத்த பாதுகாப்பு
கேரளாவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதையடுத்து, நீலகிரி மாவட்ட எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள படிஞ்சாரதாரா வனப் பகுதியில் நேற்று கேரள தண்டர்போல்ட் பிரிவினர் வனப்பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது . காட்டுக்குள் முகாம் அமைத்து தங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் அதிரடிப்படையினருக்கிடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த மாவாேயிஸ்ட் வேல்முருகன் உயிரிழந்தார். இவர் தேனி மாவட்டத்தை சேர்ந்ததவர். இந்த என்கவுண்டரில் மேலும் ஒரு மாவோயிஸ்ட்க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சில மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து வனப்பகுதிக்குள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், வயநாடு மாவட்டத்தின் அருகில் நீலகிரி மாவட்டடம் இருப்பதால், எல்லையோர சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தப்பித்த மாவோயிஸ்ட்கள் தமிழக வனப் பகுதிக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் , எல்லை பகுதி அருகேயுள்ள காவல் நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனகர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, குன்னூர் அருகேயுள்ள நெடுகல்கம்பை கொம்பையா ஆதிவாசி கிராமத்துக்கு ஓரு பெண் உட்பட 7 மாவோயிஸ்டுகள் சென்றுள்ளனர். ஆதிவாசி மக்களிடத்தில் உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு, அவர்களை மூளைச் சலவை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே , மாவோயிஸ்டு வேல்முருகன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் பலத்த பாதுகாப்புடன் எரியூட்டப்பட்டது. 2007 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள முருகமலை வனப்பகுதியில் ஆயுத பயிற்ச்சியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யபட்ட ஜாமீனில் வெளி வந்து தலைமறைவானாவர். அதற்கு பிறகு, இப்போது வயநாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
Comments