மத்திய அமெரிக்க நாடுகளில் ’ஈடா’ புயலால் கடும் பாதிப்பு
மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுராஸ் மற்றும் நிகரகுவாவில் ஈடா புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈடா புயல் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கரையைக் கடந்த நிலையில், ஹோண்டுராஸில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் மீட்புப்பணிகள் தொய்வடைந்துள்ளது.
Comments