அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 3 மாகாணங்களில் முறைகேடு என டிரம்ப் புகார்

0 2506

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 264 இடங்களை பெற்று அறுதிப்பெரும்பான்மையை நெருங்கி வருகிறார்.இன்னும், 9 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடையாத நிலையில், 3 முக்கிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி, டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தை  அணுகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. அதில் பதிவான வாக்குகள் மாநில வாரியாக விறுவிறுப்பாக எண்ணப்பட்டு, நேற்று முதலே முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

மொத்தம் 538 பிரதிநிதிகளைக் கொண்ட எலெக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர்கள் சபையில், அறுதிப்பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்களை பெறுபவர் அதிபர் பதவியைக் கைப்பற்றுவார்.

தொடக்கத்தில் இருந்தே ஜோ பைடன் முன்னிலையிலும், டிரம்ப் சற்று பின்னடைவிலும் இருந்தாலும், இருவருமே 200-க்கும் மேற்பட்ட இடங்களை பெற்ற பிறகு, விறுவிறுப்பு அதிகமானது. தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 264 இடங்களையும், அதிபர் டிரம்ப் 214 இடங்களையும் பெற்றுள்ளனர்.

ஜோ பைடன் இன்னும் 6 இடங்களைக் கைப்பற்றினால் வெற்றிவாய்ப்பை உறுதிசெய்து விடுவார். இருப்பினும், அலாஸ்கா, அரிசோனா, ஜார்ஜியா, மெயின், மிச்சிகன், நெவேடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய 9 மாநிலங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை முடிவடையவில்லை.

இவை வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கக் கூடிய முக்கிய மாநிலங்கள் என்பதால், யார் வெற்றிபெறக்கூடும் என்பதை உறுதிசெய்ய முடியாத நிலை உள்ளது.

மேலும் பென்சில்வேனியா, மிச்சிகன், ஜார்ஜியா ஆகிய 3 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி அதிபர் டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தை அணுகியுள்ளது. எனவே, உலகின் அதிகாரமிக்க பதவி என வர்ணிக்கப்படும் அமெரிக்க அதிபர் நாற்காலியை கைப்பற்றப்போவது யார் என்பதில் மேலும் இழுபறி நீடிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தல் முடிவுகள் சாதகமாக வராத நிலையில், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ள டிரம்ப், 3 மாநிலங்களில் வாக்குப்பதிவை நிறுத்தி வைக்கவும் மனு அளித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளில் 6 பேர் டிரம்பால் நியமிக்கப்பட்டவர்கள் என்றாலும், நீதிமன்றம் நியாயத்திற்குப் புறம்பாக நீதி வழங்கப்படாது என்பதால், டிரம்பிற்கு சாதகமான தீர்ப்பு எதுவும் கிடைக்காது என்றே கூறப்படுகிறது.

அதே போன்று அமெரிக்க வாக்காளர்கள் மத்தியிலும், நகரம் - கிராமம்; படித்தவர் - படிக்காதவர் பிரிவு ஆழமாக இருக்கிறது. இதில் நகரங்கள், படித்தவர்கள் ஆதரவு ஜனநாயக கட்சியின் ஜோ பைடனுக்கு அமோகமாக இருந்தது.

அந்த நிலைமையை மாற்ற டிரம்ப் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுவும் அவரது பின்னடைவுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் போலீசால் கொல்லப்பட்டது குறித்து அவர் வாய் திறக்காததால், கறுப்பின அமெரிக்கர்கள் அவரை அப்படியே கைவிட்டு விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments