கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியாவில் வரும் ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்-சீரம் இந்தியா நிறுவன சிஇஓ அடார் பூனாவல்லா தகவல்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு, வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என சீரம் இந்தியா நிறுவன சிஇஓ அடார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் இதைத் தெரிவித்துள்ள அவர், இந்தியாவிலும், பிரிட்டனிலும் நடக்கும் இறுதி கட்ட சோதனை முடிவுகளின் அடிப்படையில், ஜனவரி மாதம் கோவிஷீல்டு தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட சோதனை முடிவுகள் அடுத்த மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் டிசம்பர் மாதமே இதை பயன்பாட்டுக்கு வழங்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியாவில் வரும் ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்-சீரம் இந்தியா நிறுவன சிஇஓ அடார் பூனாவல்லா தகவல் #India | #CoronaVaccine | #Covid19 | #Covishield | #AdarPoonawalla https://t.co/aEq5OPYlTC
— Polimer News (@polimernews) November 5, 2020
Comments