ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தேய்மானத்தால் நகைகள் எடைகுறைவு; முறைகேடுகள் இல்லை- கோயில் நிர்வாகம்

0 1987
கோவில் நகைகள் எடை குறைந்த விவகாரம்: 40 ஆண்டு பயன்பாட்டால் தேய்மானம் ஏற்பட்டு எடை குறைந்ததாக கோவில் நிர்வாகம் விளக்கம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நகைகள், 40 ஆண்டுகால பயன்பாடு காரணமாக தேய்மானம் ஏற்பட்டு எடை குறைந்ததாகவும், முறைகேடு நடைபெற்றதாக கோவில் பணியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை  என்றும் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கோவிலின் நகைகள் 1978ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்டதாகவும் அதன் பிறகு கடந்த ஆண்டு ஜனவரி தொடங்கி மார்ச் மாதம் வரை மறுமதிப்பீடு செய்யப்பட்டதாகவும் ராமநாதசுவாமி கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தேய்மானம் காரணமாக, 18 வகையான தங்க நகைகளில் 68 கிராம் எடை குறைவு, வெள்ளியில் 25,811 கிராம் எடைக்குறைவு, தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியில் 43 கிராம் எடைக் குறைவு என மொத்த இழப்பு சுமார் 15 லட்ச ரூபாய் என மதிப்பீடு செய்து, அந்த பொருட்களை பொறுப்பில் வைத்திருந்த பணியாளர்களிடம் வசூல் செய்யலாம் என மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றபடி நகைகள் எண்ணிக்கையில் சரியாக உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மதிப்பீட்டுக்கும் மறுமதிப்பீட்டும் இடையே 40 ஆண்டு கால இடைவெளி உள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், தற்போது பணியில் உள்ள 37 பேர் என மொத்தம் 47 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

தேய்மான எடை குறைவுக்கான இழப்பினை ஏன் வசூல் செய்யக்கூடாது என நோட்டீசில் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், இது ஒரு வழக்கமான நடைமுறை என்றும் ராமநாதசுவாமி கோவில் இணை ஆணையர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூசாரிகள் செய்த நகை திருட்டை, எடை குறைவு என கோவில் நிர்வாகம் பூசி மெழுகுவதாக, சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் வைரலானதை அடுத்து, இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments