சென்னை : ஆன்லைன் மூலம் வேலை வழங்குவதாக 150 பேரிடம் ஏமாற்றி மோசடி செய்த மூவர் கைது

0 3039
ஆன்லைன் மூலம் வேலை வழங்குவதாக 150 பேரிடம் ஏமாற்றி மோசடி : மூவரை போலீசார் கைது

சென்னையில் ஆன்லைன் மூலம் வேலை வழங்குவதாக 150 பேரை ஏமாற்றி மோசடி செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பவர், வேலைக்காக ஆன்லைனில் நேர்காணல் நடத்தி 20ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டவர்கள் குறித்து அளித்த புகாரில் நீலாங்கரை மற்றும் அடையாறு சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கொளத்தூர் பகுதியில் போலி கால்சென்டர் நடத்தி 150க்கும் மேற்பட்டோரிடம் வேலை வாய்ப்பு உறுதி செய்தியை பொய்யாக அனுப்பி பண மோசடியில் ஈடுபட்டது உறுதிபடுத்தப்பட்டது.

இது தொடர்பாக கொளத்தூர் பிரபு, அம்பத்தூர் சாலமன் ரிச்சர்ட், அயனாவரம் யுவராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார், கார், லேப்டாப் போன்றவற்றைப் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments