வீடியோகான் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக கடன் வழங்கியதாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மீது வழக்கு
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோருக்கு, சட்டவிரோதமாக ஆயிரத்து 875 கோடி ரூபாய் வரை கடன் வழங்கியதாகவும், அதற்குப் பயனாக, அவருடைய கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனம், ஆதாயம் அடைந்ததாகவும் புகார் எழுந்தது.
இந்த வழக்கை, சி.பி.ஐ.,யும் அமலாக்கத்துறையும், விசாரித்து வருகின்றன.
மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில், சந்தாகோச்சார் மற்றும் இருவர் மீது பணமதிப்பிழப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை நேற்று தாக்கல் செய்தது.
Comments