இந்தியா வந்தடைந்த மேலும் 3 ரபேல் போர் விமானங்கள்

0 2937
பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள், இந்தியா வந்தடைந்தன.

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள், இந்தியா வந்தடைந்தன.

இஸ்ட்ரெஸ் நகரிலிருந்து (istres france air base) புறப்பட்ட விமானங்கள் இடைநிற்றல் இன்றி, 8 மணி நேரத்திற்கும் அதிகமாக பயணம் மேற்கொண்டு குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப்படை தளத்தை வந்தடைந்தன.

இதனிடையே, பிரான்சு போர் விமானத்தின் மூலம், ரபேல் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்தியா வந்தடைந்த ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. டசால்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி மீதமுள்ள 28 ரபேல் விமானங்களும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வந்தடையும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments