ரிபப்ளிக் டிவி தலைமை செய்தி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி கைது

0 5272

தாயையும் மகனையும் தற்கொலைக்கு தூண்டியதாக 2018 ல் பதிவான வழக்கில், ரிபப்ளிக் டிவி தலைமை செய்தி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். 

மும்பை மற்றும் ரெய்காட் போலீசார் சேர்ந்து, அர்ணாப் கோஸ்வாமியை, அவரது வீட்டில் இருந்து பிடித்து சென்றனர்.  விளம்பர நிறுவனம் நடத்தி வந்த அன்வாய் நாயக் என்பவருக்கு, கோஸ்வாமியின் நிறுவனம் சுமார் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பணம் கிடைக்காத விரக்தியில் அன்வாய் நாயக்கும் அவரது தாயாரும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த வழக்கில் அர்ணாப் கோஸ்வாமியுடன், பெரோஸ் ஷேக், நிதேஷ் சர்தா ஆகியோர் மீதும், 2018 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments