நேபாளத்தில் இந்திய ராணுவ தளபதி 3 நாட்கள் சுற்றுப்பயணம்
மூன்று நாட்கள் பயணமாக நேபாளம் சென்ற இந்திய ராணுவ தளபதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
தளபதி நரவானே தமது மனைவியுடன் காத்மண்டு நகருக்கு சென்றார். விமான நிலையத்தில் அவரை, நேபாள ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.
நேபாள ராணுவ தளபதி பூரண சந்திர தாபாவை சந்தித்த நரவானே நேபாள ராணுவ அதிகாரிகள் கல்லூரியில் மாணவர்கள் இடையே சிறப்புரை ஆற்றினார். நாளை அவர், நேபாள ராணுவ தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதன் பின்னர் அந்நாட்டு அதிபர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் நரவானேவுக்கு நேபாள ராணுவத்தின் கவுரவ தளபதி அந்தஸ்தை அதிபர் பித்யா தேவி பண்டாரி வழங்குகிறார்.
வெள்ளிக்கிழமை அன்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியையும் நரவானே சந்தித்து பேசுகிறார்.
Comments