புலி வேட்டைக்கு செல்கிறோம், எலிகளுக்கு பதிலளிக்க முடியாது-அமைச்சர்களுக்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி
திமுக மற்றும் அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குறித்த அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூவின் விமர்சனத்துக்கு, தாங்கள் புலி வேட்டைக்கு சென்று கொண்டிருப்பதாகவும், ஆதலால் எலிகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர். எஸ். பாரதியிடம் அமைச்சர்களின் விமர்சனம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், பொறுப்பு உள்ளவர்களுக்கு மட்டும்தான் தங்களால் பதிலை அளிக்க முடியும், எலிகளுக்கு பதிலளிக்க முடியாது என்றார்.
Comments