கேரளாவில் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து
கேரளாவில் விசாரணை நடத்த சிபிஐக்கு அளித்த அனுமதியை ரத்து செய்வது என்று அந்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதால், இனிமேல், கேரளாவில் எந்த ஒரு வழக்கு விசாரணையில் ஈடுபட வேண்டும் என்றாலும் அரசின் முன் அனுமதியை சிபிஐ பெற வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறை சட்டத்தின் அடிப்படையில் சிபிஐ உருவாக்கப்பட்டுள்ளதால், அந்த அமைப்பினர்,மாநில அரசுகளின் அனுமதி பெற்ற பின்னரே விசாரணையில் ஈடுபட முடியும். இதற்கு முன்னர் ஆந்திரா, மேற்கு வங்க அரசுகள் இதே போல சிபிஐக்கான அனுமதியை ரத்து செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments