லடாக் எல்லையில் பணியாற்றும் இந்திய வீரர்களுக்கு சிறப்பு உடைகள்
லடாக் எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்களுக்கு அதிகபட்ச குளிரையும் தாங்கும் அமெரிக்க சிறப்பு உடை அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடனான மோதலை அடுத்து அங்கு இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது. குறிப்பாக கிழக்கு லடாக்கில் புதிதாக கைப்பற்றப்பட்ட இடங்களில் இந்திய வீரர்கள் ரோந்து மற்றும் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அங்கு இப்போது உடலை வாட்டும் குளிர்காலம் தொடங்கி உள்ளது.
இந்த குளிரை தாங்கி பணியாற்றும் வகையில் இந்திய ராணுவத்தினருக்கு, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சிறப்பு உடை வழங்கப்பட்டுள்ளது.
கதகதப்பூட்டும் உள்ளாடைகள், கைவிரல்களை மூடும் உறைகள்,கால்களை காக்கும் கனத்த காலணிகள் என 20 வகையான உடைகளை ஒருசேர அணிந்து கொண்டு இந்திய வீரர்கள் கொட்டும் பனிக்குள்ளும் குளிராமல் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments