அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு டுவிட்டர் நிறுவனம் கண்டனம்
அதிபர் தேர்தல் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட பதிவுகளுக்கு டுவிட்டர் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் தலையீடும் வகையிலான செயலுக்கோ, தேர்தலில் குளறுபடிகளை மேற்கொள்ளும் வகையிலான செயலுக்கோ தனது சேவைகளை பயன்படுத்த கூடாதென்ற கொள்கையை டுவிட்டர் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
அத்தகைய பதிவுகளை மறைப்பது போன்ற நடவடிக்கையையும் டுவிட்டர் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டிரம்ப் இன்று வெளியிட்ட பதிவில், ஜனநாயக கட்சியினர் சதிமூலம் வெற்றியை தட்டி பறிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இது டுவிட்டர் கடைபிடிக்கும் கொள்கைக்கு முரணாக இருந்ததால், அதை அந்நிறுவனம் மூடி மறைத்துள்ளது. மேலும் அந்த பதிவில் இருக்கும் கருத்துகள் சர்ச்சைக்குரியது எனவும், தேர்தல் அல்லது பிற செயல்களில் தவறாக வழிநடத்தும் வகையிலானது எனவும் கூறியுள்ளது.
Comments