போதைப்பொருள் வழக்கு: நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

0 2215
போதைப்பொருள் வழக்கில் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

போதைப்பொருள் வழக்கில் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரும், ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே 5 முறைக்கு மேல் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் அவர்கள் 2 பேரும், ஜாமீன்கோரி மனுக்களை தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றபோது, 2 பேருக்கும் ஜாமீன் வழங்கினால், தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 2 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இதேபோல், போதைப் பொருள் விற்பனையாளர் பிரசாந்த் ரங்காவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments