வியன்னா பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அந்த நகரின் தேவாலயத்திற்கு அருகே 6 இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் 4 பேர் பலியாகினர்.
துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒரு பயங்கரவாதியை போலீசாரால் சுட்டுக் கொன்றனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு தற்போது பொறுப்பேற்றுள்ளது.
அமாக் செய்தி நிறுவனம் மூலம் அபு டாக்னா அல் அல்பானி (Abu Dagnah Al-Albany) என்பவன் கையில் துப்பாக்கிகள், கத்தியோடு இருக்கும் புகைப்படம், வீடியோவை வெளியிட்டு, அவன்தான் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது.
எனினும் ஆஸ்திரிய அதிகாரிகள், அவனுடைய பெயர் குஜ்திம் பெஜ்ஜூலாய் (Kujtim Fejzulai) என்றும், ஆஸ்திரியாவிலிருந்து ஐஎஸ் அமைப்பில் சேர சிரியா செல்ல முயன்றபோது 2019ம் ஆண்டில் 22 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவன் என்றும் தெரிவித்துள்ளனர்.
Comments