"பொதுத்துறை வங்கிகளில் சேவை கட்டணம் உயர்த்தப்படவில்லை" - நிதியமைச்சகம் விளக்கம்
பொதுத்துறை வங்கிகளில் சேவை கட்டணம் உயர்த்தப்படவில்லை என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில்,கொரோனா பாதிப்பை கருதி பொதுத்துறை வங்கிகளில், சேவை கட்டணத்தை உயர்த்த விரும்பவில்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது.
பேங்க் ஆப் பரோடாவில் சில சலுகைகளை குறைக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், அத்திட்டமும் கைவிடப்பட்டு உள்ளது. எனவே சேமிப்பு கணக்குகளுக்கு, எந்த வங்கியும் சேவை கட்டணத்தை உயர்த்தவில்லை. விரைவில் உயர்த்தும் எண்ணமும் இல்லை என, வங்கிகள் தரப்பில் நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
"பொதுத்துறை வங்கிகளில் சேவை கட்டணம் உயர்த்தப்படவில்லை" - நிதியமைச்சகம் விளக்கம் #FinanceMinistry | #ServiceTax | #PublicSectorBank https://t.co/SNNS0GEmOZ
— Polimer News (@polimernews) November 4, 2020
Comments