அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் கொள்கைகள்

0 1941
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் கொள்கைகள்

அமெரிக்க அதிபர் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இருவரின் எதிரெதிர்க் கொள்கைகள் குறித்த ஒரு பார்வை.

அமெரிக்கா என்றதும் உடனடி நினைவுக்கு வருவது அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைதான். உலகின் மிகப் பெரிய வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைதான் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய தேர்தல் வாக்குறுதியாக அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நாடாக மாற்றப் போவதாகக் கூறும் டிரம்ப், ராணுவத்தை வலுப்படுத்தியது மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தியதை தனது சாதனையாகக் குறிப்பிடுகிறார். மேலும் வெளிநாடுகளில் உள்ள படைகளை குறைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுக்க மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டுவதிலும் அவர் தீர்மானமாக உள்ளார்.

ஆனால் டிரம்ப்பின் ஆட்சியில் வெளிநாடுகளில் அமெரிக்காவின் செல்வாக்கு சரிந்து விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள பைடன், சர்வதேச நாடுகளுடன் அமெரிக்காவின் உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். டிரம்ப்பால் அமைக்கப்பட்ட குடியேற்றக் கொள்கை மாற்றியமைக்கப்படும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்காக வணிக வரியைக் குறைக்க வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வதற்கும் டிரம்ப் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரிகளை அதிகரிக்க வேண்டும் என்பதும் டிரம்பின் முக்கியக் கொள்கை. ஆனால் வணிக வரியை அதிகப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதுடன் வெளிநாட்டுப் பொருட்களுக்கு கூடுதல் வரி என்ற கொள்கையைக்கு எதிர்ப்பு என்பது ஜோ பைடனின் நிலைப்பாடாக உள்ளது.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருப்பது அமெரிக்காவை அதிக நிதிச்சுமைக்கு தள்ளும் என்று கூறிய டிரம்ப், ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் இணையப் போவதில்லை என்றும் உறுதிபடக் கூறியுள்ளார். ஆனால் காலநிலைக் கொள்கை உலகளாவிய பார்வை கொண்டது என்பதால் அதில் அமெரிக்கா மீண்டும் இணைய வேண்டும் என்பது பைடனின் கொள்கை.

ஒபாமா கேர் காப்பீட்டுத் திட்டத்திற்குப் பதிலாக புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், மருந்துகளின் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் ஒபாமா கேர் காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தினால் மருந்துகளின் விலை தாமாகக் குறைந்து விடும் என்பது ஜோ பைடனின் நிலைப்பாடாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments