சிவன் கோவிலில் திருமாவளவன்..! லிங்கத்தை தொட்டு மனு எதிர்ப்பு பிரசாரம்

0 26536
சிவன் கோவிலில் திருமாவளவன்..! லிங்கத்தை தொட்டு மனு எதிர்ப்பு பிரசாரம்

இந்து பெண்களை இழிவுபடுத்திவிட்டதாக திருமாவளவனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தனது கருத்துக்கு பின்னணியில் திமுக இருப்பதாக கூறுவது மோசடி அரசியல் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மனு ஸ்மிருதி என்னும் நூலில் இந்து பெண்கள் குறித்து கூறியிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்தை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் திருமாவளவனுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால் ஆவடியை சேர்ந்த முன்னாள் ஸ்தாபன காங்கிரஸ் பிரமுகரும், சைவதமிழ் பேரவை என்ற அமைப்பின் நிர்வாகியுமான கலையரசி நடராஜன் என்பவர் திருமாவளவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மனு ஸ்மிருதியை தடை செய்யக்கோரி துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வை கலையரசி நடராஜன் நடத்திவரும் சிறிய அளவிலான சிவன் கோவிலில் வைத்து தொடங்க திட்டமிட்டிருந்த திருமாவளவன், தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றார்.

அங்கிருந்த சிவலிங்கத்தின் பின்பக்கம் முட்டியிட்ட நிலையில் அமர்ந்து லிங்கத்தை தொட்டுப்பார்த்த திருமாவளவன், சிவலிங்கத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் அங்கிருந்த மகளிரணியினரிடம் துண்டு பிரசுரத்தை கொடுத்து மனுஸ்மிருதிக்கு எதிரான தனது பிரச்சாரத்தை திருமாவளவன் தொடங்கி வைத்தார்

அப்போது பேசிய திருமாவளவன், தான் கூறிய கருத்துக்கு பின்னனியில் திமுக இருப்பதாக சனாதன சக்திகள் பரப்பிவருவதாகவும், தனது கருத்துக்கு, தான் மட்டுமே பொறுப்பு என்றும் கூட்டணியில் இருப்பதாலேயே திமுக இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று அவர்கள் கூறுவது மோசடிதனமான அரசியல் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, பேசிய திமுக மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய்வழக்கு ,அவர் பார்க்காத சிறைகளே இல்லை என்றாலும் திகார் சிறையை மட்டும் அவர் இன்னும் பார்க்கவில்லை என்று வேடிக்கையாக பேச்சை தொடங்கினார், ஒரு கட்டத்தில் திமுக வெற்றி பெற்றதும் மனுதர்மத்தை எரித்து மூட்டை கட்டி வைத்து விட்டுதான் ஆட்சியில் அமர்வோம் என்றும் திருமாவளவனின் உடலில் உள்ள ரோமத்திற்கு ஒரு பாதிப்பு என்றாலும் திமுக முன் நின்று போராடும் என்றும் சூளுரைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments