மத்தியபிரதேசத்தில் 28 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது
மத்தியபிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
230 சட்டசபை தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில், ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ.க்கள் பதவியில் இருந்து விலகினர். அவர்களை தொடர்ந்து மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பாஜகவில் இணைந்தனர். இதையடுத்து ஏற்கனவே காலியாக இருந்த 3 இடங்களை சேர்த்து மொத்தம் 28 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது.
இன்று பதிவான வாக்குகள் வரும் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தற்போது107 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ள பா.ஜ.க. ஆட்சியை தக்க வைக்க இன்னும் 9 தொகுதிகள் வெற்றிபெற வேண்டும். 88 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள காங்கிரஸ் இழந்த ஆட்சியை மீண்டும் பெற 28 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும்.
Comments