திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை பக்தர்கள் இன்றி நடத்த முடிவு

0 1787

திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவ விழா கோவிலுக்குள் ஏகாந்தமாக பக்தர்கள் இன்றி தனிமையில் நடத்தப்பட உள்ளது.

அந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடத்தப்படும்.நடப்பு ஆண்டில் வருகிற 11-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. 11-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கும் விழாவில் ஒவ்வொரு நாளும் தாயார் வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

19-ந்தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. திருப்பதியில் 2 பிரம்மோற்சவ விழாக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து நடத்தப்பட்டது போல் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவ விழாவும் கோவிலுக்குள் ஏகாந்தமாக பக்தர்கள் இன்றி நடத்தப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments