நவ. 16-ல் பள்ளி, கல்லூரிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின் கருத்து பரிசீலிக்கப்படும்- அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
தமிழகத்தில் பள்ளி - கல்லூரிகளை, வருகிற 16 ஆம் தேதி திறக்க எதிர்ப்பு தெரிவித்த, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து பரிசீலிக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை - புளியந்தோப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தான் தமிழகத்தில் தற்போது உள்ளது என்றார். பாஜகவின் வேல் யாத்திரை குறித்த கேள்விக்கு, சமத்துவத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில், யார் செயல்பட்டாலும் பாரபட்சமின்றி இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படும் என அவர் பதிலளித்தார்.
Comments