அரியலூர் : சென்னை பேருந்தை வழிமறித்து ஜப்தி... பயணிகள் குழந்தைகளுடன் தவிப்பு!

0 4330

கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தை நீதிமன்ற அமீனாக்கள் ஜெயங்கொண்டத்தில் ஜப்தி செய்ததால் அதில் பயணம் செய்த 28 பயணிகள் நடுரோட்டில் இறக்கி விடப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான கும்பகோணம் கிளையை சேர்ந்த tn-01an-3400 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 28 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நால் ரோடு பகுரியில் பேருந்து வந்தபோது ஜெயங்கொண்டம் நீதிமன்ற அமீனா மகாராஜன் மற்றும் வழக்கறிஞர்கள் சேர்ந்து மறித்தனர்.

இந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து கடந்த 2015- ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் விபத்தை ஏற்படுத்தியதில் ல் 2 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான , வழக்கு மோட்டார்வாகன தீர்ப்பாயத்தில் நடைபெற்றது . உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 14 லட்சத்து 72 ஆயிரத்து 722 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இழப்பீட்டு தொகையை போக்குவரத்து கழக நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடினர்.

தொடர்ந்து, ஜெயங்கொண்டம் நீதிமன்ற உத்தரவின்படி அமீனா மகாராஜன் மேற்படி பேருந்தை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் இறங்கினார். தொடர்ந்து, பேருந்தை வழி மறித்த அமீனா, பேருந்தின் கண்ணாடியில் ஜப்தி நோட்டீஸை ஒட்டினார். பேருந்திலிருந்த பயணிகளும் நடு ரோட்டில் இறக்கி விடப்பட்டன. இதனால், பெண்கள், குழந்தைகள் நடு ரோட்டில் தவித்தனர். தொடர்ந்து, கும்பகோணத்தில் இருந்து சென்னை சென்ற மற்றொரு பேருந்தில் பயணிகள் ஏற்றிவிடப்பட்டு பயணத்தைத் தொடர்ந்தனர். ஜப்தி செய்யப்பட்ட பேருந்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments