நிர்வாக வசதிக்காக, மருத்துவ கல்வி இயக்குநரகத்தை 4 மண்டலமாக பிரிக்க திட்டம்

0 1463
நிர்வாக வசதிக்காக, மருத்துவ கல்வி இயக்குநரகத்தை 4 மண்டலமாக பிரிக்க திட்டம்

நிர்வாக வசதிக்காக, மருத்துவ கல்வி இயக்குநரகத்தை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 மண்டலமாக பிரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மருத்துவ கல்வி இயக்குநருக்கு அடுத்தப்படியாக, மண்டல கூடுதல் மருத்துவ கல்வி இயக்குநர் என்ற பதவியை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களை நிர்வகிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் 26 அரசு மருத்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளும், இரண்டு பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. தனியாரில் 14 மருத்து கல்லூரி மருத்துவமனையும், 18 பல் மருத்துவ கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

இது தவிர தமிழகத்தில் மேலும் 11 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையும், 2 பல் மருத்துவ கல்லூரியும் மருத்துவமனையும் வரவுள்ளது குறிப்பிட தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments