ஆசிரியரின் நெற்றியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஓவியம்... காரணம் என்ன?

0 3100

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரி, தன் நெற்றியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உருவத்தை ஆசிரியர் ஒருவர் வரைந்து வித்தியாசமான முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள சிவனார்தாங்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக செல்வம் என்பவர் பணி புரிந்து வருகிறார். தற்போது,40 வயதான அவருக்கு இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இவரைப் போன்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தமிழகத்தில் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கின்றனர்.

எனவே, பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி தன் நெற்றியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி படத்தை செல்வம் வரைந்தார். கண்ணாடியை பார்ததுக் கொண்டே 20 நிமிடங்களில் வாட்டர் கலர் கொண்ட முதல்வரின் ஓவியத்தை தீட்டிய செல்வத்தை பிற ஆசிரியர்கள் பாராட்டினர்.

இது குறித்து செல்வம் கூறுகையில் - கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை போன்ற பகுதிநேர ஆசிரியர்கள் 16.ஆயிரம் பேரை பணியில் நியமித்தார். கடந்த 8 ஆண்டுகளான பணிபுரிந்து வருகிறோம். தற்போது , 12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்கள் பணியில் இருக்கிறோம். மாத ஊதியமாக 7,700 ரூபாய் கிடைக்கிறது. இந்த சொற்ப சம்பளத்தை கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் திணறி வருகிறோம்.

எனவே, எங்களை பணி நிரந்தரம் செய்து முதல்வர் உதவி செய்ய வேண்டும். இதற்காகாவே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்தை பெறும் வகையில், அவரின் உருவப்படத்தை என் நெற்றியில் வரைந்தேன். எங்களைப் போன்ற ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து எங்கள் வாழ்க்கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒளியேற்றுவார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments