இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 4 நாடுகளின் கடற்படைகள் கூட்டுப் பயிற்சி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கடற்பகுதியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 4 நாட்டு கடற்படைகள் மிகப்பெரிய ஒத்திகையை தொடங்கியுள்ளன.
குவாட் அமைப்பிலுள்ள இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளின் கடற்படை கப்பல்கள், மலபார் ஒத்திகை என்ற பெயரில் இம்மாதம் 2 முறை ஒத்திகை நடத்துகின்றன. இதில் முதல்கட்ட ஒத்திகை, வங்காள விரிகுடா கடலில் இன்று முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.
2007க்கு பிறகு முதன்முறையாக ஆஸ்திரேலியா பங்கெடுத்துள்ளது. இந்திய கப்பல்களோடு, அமெரிக்க ஏவுகணை தாங்கி கப்பலான ஜான் எஸ்.மெக்கைன் ஆஸ்திரேலியான் எச்எம்எஸ் பல்லாராத் கப்பல் , ஜப்பானின் ஜே.எஸ்.ஓனாமி கப்பல் கலந்து கொண்டுள்ளன. லடாக் எல்லையில் சீனா-இந்தியா இடையே பதற்றம் நிலவும் நிலையில் ஒத்திகை நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.
Comments