ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு- கிரிக்கெட் வீரர்கள், நடிகை, நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

0 3391
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு- கிரிக்கெட் வீரர்கள், நடிகை, நடிகர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்

ஆன்லைன் ரம்மியை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில்,  ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ரானா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் பலர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துகின்றனர் என்று கூறிய நீதிபதிகள், பொதுமக்களில் பலர் அவர்களை பின்பற்றுவார்கள் என அறிந்தும் இவ்வாறு செயல்படுவது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments