'என்ன சூனியம் வைத்து விடவா?‘' - சாமியார் அடாவடியால் பணம் கொடுத்தவர்கள் கதறல்

0 4942

ராணிப்பேட்டையில் மக்களிடம் சாமியார் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அடுக்கடுக்காகப் புகார் எழுந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கானார் நீலகண்டன் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 59). இவர், ஆற்காடு பஜார் பகுதியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். கானார் நீலகண்டனுக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு. கடந்த 2017 - ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில் செயல்பட்டு வரும் சர்வமங்களா பீடத்தை சேர்ந்த சாந்தா சாமியாரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் அளவுக்கு நெருக்கமாகியுள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவருடன் சேர்ந்து தொழில் செய்து வருவதாகவும், அதில் மாதம் பல லட்ச ரூபாய் வருமானம் கிடைப்பதாகக் கூறி சங்கரை அந்தத் தொழிலில் முதலீடு செய்ய சாமியார் ஆசை வார்த்தை கூறியுள்ளார். சாந்தா சாமியார் கூறிய வார்த்தைகளை நம்பிய சங்கர் ரூ 10 லட்சத்தை சாமியாரிடம் கொடுத்துள்ளார்.

பணம் கொடுத்த ஓரிரு மாதத்தில் பெங்களூரு நபர் தன்னை ஏமாற்றி விட்டதாக சங்கரிடம் சாமியார் கூறியுள்ளார். எனினும், உங்கள் பணத்தை ஓரிரு மாதத்தில் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் உறுதி கூறியுள்ளார். ஆனால், பணம் கொடுத்து மூன்று ஆண்டுகாலமாகி விட்ட நிலையில் தற்போது வரை பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. சங்கர் பணத்தைத் திருப்பி கேட்ட போது, 'சூனியம் வைத்து விடுவேன்' என்று சாமியார் மிரட்டியுள்ளார். மேலும், 'பணத்தை தர முடியாது. உன்னால் முடிந்ததை செய்து கொள்' என்று சவால் விட்டுள்ளார்.

இதையடுத்து , தனது பணத்தை மீட்டுத் தர சங்கர் ராணிப்பேட்டை காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் புகார் அளித்தார். ஏற்கெனவே , ஆற்காட்டைச் சேர்ந்த பென்ஸ் பாண்டியன் மற்றும் ஹரிஷ் குமார் ஆகியோரிடம் ரூ. 10 லட்ச ரூபாயும் வாலாஜாவைச் சேர்ந்த கேசவமூர்த்தி என்பவரிடம் ரூ. 45 லட்சம் வரை மோசடி ஈடுபட்டுள்ளதாக சாமியார் மீது ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments