அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தேர்தல் தினத்துக்கு பிறகும் இமெயில் ஓட்டுகளை ஏற்க நீதிமன்றம் அனுமதி...ட்ரம்ப் எதிர்ப்பு
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் அதிபர் தேர்தல் தினத்திற்கு பிறகும் வரும் இமெயில் ஓட்டுகளை ஏற்க நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அம்மாநிலத்தில் தேர்தல் தினத்திற்கு பிறகும் 3 நாட்கள் வரை வரும் இமெயில் ஓட்டுகளை எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், விஸ்கான்சினில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மோசடிக்கு வழிவகுக்கும் என்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
Comments