இலங்கை : கரை ஒதுங்கி உயிருக்குப் போராடும் திமிங்கலங்கள்... வேதனையுடன் தவிக்கும் மக்கள்

0 2804

 இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள ஏராளமான திமிங்கலங்கள் உயிருக்காக போராடி வருவதை மக்கள் நேரில் பார்த்து வேதனையடைந்துள்ளனர்.

சமீப காலமாக அரிய வகை திமிங்கலங்கள், டால்பின் மீன்கள் நூற்றுக்கணக்கான அளவில் கரை ஒதுங்கி இறப்பது வாடிக்கையாகி வருகிறது. பொதுவாக , ஒரு குழுவில் உள்ள திமிங்க லம் இரை தேடி சென்று இரை கிடைத்து விட்டால், மற்றவற்றுக்கு சிக்னல்கள் அனுப்பும். உடனே, அந்த குழுவில் உள்ள மற்ற திமிங்கலங்களும் மொத்தமாக அந்த பகுதிக்கு சென்று விடும் தன்மையுடயவை. சில சமயங்களில் தவறான இடத்திலிருந்து சிக்னல் அனுப்பினால், மற்ற திமிங்கலங்களும் அங்கே சென்று உயிரை இழந்து விடுகின்றன.

அதே போல, இலங்கை தலைநகர் கொழும்பு அருகேயுள்ள பாணந்துறை கடற்கரையில் நேற்று முதல் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரையொதுங்கி வருகின்றன. இந்த திமிங்கலங்களில் உடலில் எந்த காயமும் இல்லை என்பதோடு, உயிருடனும் உள்ளன. கடற்கரையில் இந்த மீன்கள் உயிருக்காக போராடி வருகின்றன. இலங்கை கடற்படையினர் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் திமிங்கலங்களின் உயிரை காக்க போராடி வருகின்றனர்.

கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 25 அடி நீளம் இருக்கின்றன. இலங்கை போலீசார் மற்றும் கடலோர படையினர் இணைந்து கரை ஒதுங்கிய திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்ப நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே, திமிங்கலங்களை பார்க்க ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். . கடல் கரையில் உயிருக்கு போராடும் திமிங்கலங்களை கண்டு மக்கள் வேதனையடைந்துள்ளனர்.

திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments