அமெரிக்க அதிபர் பதவி தேர்தல்...நியுஹாம்சையரில் முதல் வாக்குப்பதிவு
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. முதல் வாக்கு, நியு ஹாம்சையரில் உள்ள சாவடியில் நள்ளிரவில் பதிவாகியுள்ளது
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. அமெரிக்கா-கனடா எல்லையில் நியு ஹாம்சையரில் இருக்கும் டிக்ஸ்வில்லி நோட்ச் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வழக்கமான முறைப்படி நள்ளிரவில் முதலாவதாக வாக்குப்பதிவானது. அங்கு 5 வாக்குகள் பதிவான நிலையில் உடனடியாக அவை எண்ணப்பட்டன. இதில் 5 வாக்குகளுமே, ஜோ பிடனுக்கு கிடைத்துள்ளது.
இதேபோல் மில்ஸிபீல்ட் எனுமிடத்திலும் நள்ளிரவில் வாக்குகள் பதிவாகின. இதில் டிரம்புக்கு 16 வாக்குகளும், ஜோ பிடனுக்கு 5 வாக்குகளும் கிடைத்துள்ளன.
ஹார்ட்ஸ் லோகேசன் எனுமிடத்திலும் வழக்கமாக நள்ளிரவில் வாக்குப்பதிவு நடைபெறும். ஆனால் இந்த முறை அங்கு நள்ளிரவில் வாக்குப்பதிவு நடக்கவில்லை. அங்குள்ள 48 பேரும் பிற பகுதிகளில் நடைபெறுவதை போல பகல் நேரத்தில் வாக்குகளை பதிவு செய்யவுள்ளனர்.
ஏற்கெனவே தபால் உள்ளிட்ட வழிகள் மூலம் 10 கோடி பேர் வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 6 கோடி பேர் வரை பிற்பகல் 3.30 மணிக்கு மேல் வாக்குகளை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments