சிக்க வைத்த மீசை... ஜாமீனில் எடுக்க வழக்கறிஞருக்கு வைரக்கம்மல்! - தி.நகர் நகைக்கடை கொள்ளையன் 'மார்கெட் 'சுரேஷின் பின்னணி

0 14158
கொள்ளையன் மார்க்கெட் சுரேஷ்

தியாகராய நகர் நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட மார்கெட் சுரேஷை கைது செய்தது குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை தியாகராயர் நகரில் நகைக்கடை ஒன்றில் கடந்த மாதம் 21-ஆம் தேதி 2.5 கிலோ தங்கம் மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை வழக்கில் சி.சி.டி.வி, செல்போன் நெட்வொர்க் உள்ளிட்ட தொழில் நுட்ப வசதிகளின் உதவியுடன் துப்பு துலக்கி கொள்ளை கும்பலை போலீஸார் கைது செய்தனர். அதோடு, 1.5 கிலோ தங்க நகைகளையும், 11 கிலோ வெள்ளியையும் மீட்டடுள்ளனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு தெற்கு மண்டல காவல் கூடுதல் ஆணையர் தினகரன், வெகுமதி மற்றும் சான்றிதழ் அளித்து பாராட்டினார். கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் மார்க்கெட் சுரேஷ் சிக்கியது குறித்த சுவாரஸ்யத் தகவல்களும் கிடைத்துள்ளன.image

தியாகராய நகரில் கடந்த மாதம் 21 ஆம் தேதி இரண்டரை கிலோ தங்க நகைகள், 15 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட மார்க்கெட் சுரேஷ் தலைமையிலாள கொள்ளையர்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு தங்கள் முகத்தை மறைத்து கொண்டனர். கொள்ளையன் மார்கெட் சுரேஷ் தலையில் தொப்பி வைத்துக்கொண்டு முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்து கொண்டு, வீடு என்று கருதி உள்ளே நுழைந்துள்ளான். ஆனால், உள்ளே நகைக்கடையே இருந்ததால், வெறி கொண்ட கொள்ளை கும்பர் நகைகளை சுருட்டி வாரிக்கொண்டு தப்பியது. கொள்ளையர்கள் கையுறை பயன்படுத்திக் கொள்ளை அடித்ததால், கைரேகைகள் பதிவாகவில்லை. கைரேகை பதிவாகியிருந்தால், குற்ற ஆவண காப்பகத்தில் இருக்கும் பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு எளிதில் கண்டுபிடிக்கலாம். அதற்கு வழியில்லாததால், சி.சி.டி.வி காட்சிகளை போலீஸார் மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்த்தனர்.

ஒரு முறை அலமாரியில் இருந்து நெகிழி பைகளில் வைக்கப்பட்டிருந்த நகை பையை மார்கெட் சுரேஷ் வாயால் கடித்து பிரிக்கும் போது, சில விநாடிகள் முகக் கவசத்தை இறக்கியுள்ளான். அப்போது, மார்கெட் சுரேஷின் அடர்த்தியான மீசை தென்பட்டுள்ளது. அந்த அடர்த்தியான மீசையை அடையாளமாகக் கொண்டு போலீஸார் கொள்ளையனை தேடும் பணியில் ஈடுபட்டனர். கொள்ளையடித்த விதத்தைப் பார்த்த போதும் கொள்ளையடிப்பதில் பழுத்த அனுபவம் கொண்டவன் என்பதும் தெரிய வந்தது. இதனால், ஏற்கனவே வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கொள்ளையர்களின் புகைப்படத்தோடு சி.சி.டி.வி யில் சிக்கிய காட்சியை ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தனர். இதில், மார்க்கெட் சுரேஷுடன் மட்டுமே அந்த புகைப்படம் ஒத்துபோனது. குறிப்பாக , மீசையின் அடர்த்தியை வைத்து மார்க்கெட் சுரேஷ்தான் கொள்ளையில் ஈடுபட்டவன் என்பது உறுதி செய்யப்பட்டது.

image

கடந்த ஆண்டு பாண்டிச்சேரியில் கொள்ளையில் ஈடுபட்ட மார்க்கெட் சுரேஷ், அவனது தோழி கங்கா ஆகயோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுதலையானார்கள். தொடர்ந்து, கொள்ளையன் சுரேஷ் பெண் தோழி கங்காவுடன் தொடர்பில் இருந்துள்ளான். திருவள்ளூரில் உள்ள கங்காவைப் பிடித்து தனிப்படைப் போலீசார் விசரித்த போது, தியாகராய நகர் நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளில் ஒரு பகுதியை மார்கெட் சுரேஷ் கங்காவிடம் கொடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது.  தொடர்ந்து, வீட்டின் கொல்லைபுறத்தில் கங்கா புதைத்து வைத்திருந்த நகைகளையும் போலீஸார் மீட்டனர்.

கங்கா கொடுத்த தகவல் அடிப்படையில், இந்த கொள்ளையில் தொடர்புடைய  திருவண்ணாமலையைச் சேர்ந்த அமல்ராஜ், அப்புன் என்கிற வெங்கடேசன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அதே வேளையில், திருவள்ளுர் போலீஸார் மற்றோரு வழக்கில் மார்கெட் சுரேஷையும் கைது செய்தனர். தியாகராய நகரில் வீடு என்று கருதியே கொள்ளையடிக்க உள்ளே சென்றுள்ளனர். ஆனால், அது மொத்த நகைக்கடையாக இருக்க கிலோ கணக்கில் நகைகளை அள்ளி சென்றுள்ளனர். பிறகு, கங்காவின் வீட்டுக்கு சென்று பங்கு பிரித்துக் கொண்டு பிரிந்து சென்றுள்ளனர். மார்கெட் சுரேஷ், வழக்கறிஞரிடம் தன்னை ஜாமீனில் எடுக்க வைரக்கம்மல் ஒன்றை முன் கூட்டியே கொடுத்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அந்த வழக்கறிஞரை பிடித்து வைரக்கம்மலையும் போலீஸார் மீட்டுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் விரைவில் சிக்குவார்கள் என்று  போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments