ஆஸ்திரிய நாட்டில் தேவாலயத்தைக் குறிவைத்து மர்ம நபர்கள் பயங்கர துப்பாக்கிச் சூடு;2 பேர் உயிரிழப்பு

0 1502
ஆஸ்திரிய நாட்டில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தேவலாயம் ஒன்றிற்கு அருகே 6 வெவ்வெறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டில் கொரோனா பரவலால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது அமலுக்கு வரும் சில மணி நேரத்துக்கு முன்பு நகரின் பல இடங்களில் துப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள் பலர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் 15 பேர் படுகாயமடைந்த நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அவரச சேவை வாகனங்களின் சைரன் ஒலி நகரம் முழுவதும் ஒலித்தது.

இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் கியூசெப் கன்ட் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments