மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியீடு : பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை

0 9106

பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ற மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக பேட்டரி மூலம் இயங்கும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் மோட்டார் வாகன வரி 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நவம்பர் 3 ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments