11 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுடன், 11 மாநிலங்களில் காலியாக உள்ள 54 தொகுதிகளிலும் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீங்கி, பாஜகவில் இணைந்ததால் 28 எம்எல்ஏக்கள் பதவியை இழந்தனர். இதையடுத்து அந்த குறிப்பிட்ட தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இதேபோல், குஜராத், உத்தரபிரதேசம், ஒடிசா, நாகலாந்து, கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Comments