டெல்லியில் உருவாக்கப்படும் தொழிற்பூங்காக்களில் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

0 1304
டெல்லியில் உருவாக்கப்படும் தொழிற்பூங்காக்களில் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் உருவாக்கப்படும் தொழிற்பூங்காக்களில் எந்த ஒரு உற்பத்தி நிறுவனங்களுக்கும், அனுமதி அளிக்கப்படாது என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தங்களது அரசின் முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அதனை செயல்படுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளதாக கூறினார்.

சேவை மற்றும் உயர்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும், ஏற்கனவே உள்ள மாசு ஏற்படுத்தும் உற்பத்தி நிறுவனங்களுக்கும் மாற்றியமைத்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments