இன்னும் 30 ஆண்டுகளில் 30 பெருநகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தகவல்
ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், கொல்கத்தா, மும்பை, கோழிக்கோடு உள்ளிட்ட 30 பெருநகரங்களில் இன்னும் 30 ஆண்டுகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச இயற்கை நிதியம் நடத்திய ஆய்வில், 2050 ஆம் ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் 100 முக்கிய உலக பெருநகரங்களில் குறைந்தது 35 கோடி மக்கள் வசித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில், தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளின் மக்கள் தொகை 51 சதவீதமாக உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments